ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம்சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம் என ஒரே நாடு- ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஒரு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். தமிழ் உறுப்பினர்களை நியமனத்தில் சிக்கல் நிலை காணப்படுப்படுகிறது. அதாவது கண்டியில் உள்ள ஒருவரை நியமிப்பதில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் விரும்புவதில்லை.
ஆகவே எதிர்வரும் காலத்தில் செயலணியின் உறுப்பினர் நியமனம் பரிசீலனை செய்யப்படும். தமிழ் பிரநிதிகள் இல்லை என போர்கொடி தூக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றம் தொடர்பிலும், மதமாற்றம் தடைச்சட்டம் தொடர்பிலும் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை
சிறுபான்மையினர் என்ற சொற்பதத்தை கூட பயன்படுத்துவதை விரும்பவில்லை. மாகாணம், இனம் , மதம் என்ற வேறுபாடுகள் தேசிய ஒருங்கிணைப்பிற்கு பிரதான தடையாக காணப்படுகிறது.
ஆகவே நாட்டு மக்களின் தனிப்பட்ட கொள்கைகளை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.