Home முக்கிய செய்திகள் அனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!

அனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!

183
0

பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த வருடத்தில் நடைபெற வேண்டிய அனைத்து பரீட்சைகளும் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலுக்கமைய 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை 2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல மார்ச் 5 ஆம் திகதி வரையில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையிலும் நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.