Home செய்திகள் ஸ்கொட்லாந்தின் – கிளாஸ்கோவில் கோட்டபாயவிற்கு எதிராக திரண்ட தமிழர்கள்!

ஸ்கொட்லாந்தின் – கிளாஸ்கோவில் கோட்டபாயவிற்கு எதிராக திரண்ட தமிழர்கள்!

129
0

ஸ்கொட்லாந்தின் – கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் கல்ந்துகொண்டு உரையாற்ற உள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று 01-11-2021 திங்கள் அதிகாலை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள கோட்டபாய ராஜபக்‌ஷ உட்பட்ட பல உலகத் தலைவர்கள் தங்கியிருக்கின்ற நிலையில், அந்த நட்சத்திர விடுதியின் முன்பாக திரண்டுள்ள தமிழர்கள் “ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி’, ‘மனித உரிமைகளை மீறுபவர்’, ‘கொ லையாளி’ “ என்று பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் அவர் மாநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் தலையிட்டு பாதுகாப்பு அளித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் தற்போது, புலம்பெயர் தமிழர்கள் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.