Home செய்திகள் நீதி அமைச்சருக்கே தெரியாமல் அமைக்கப்பட்ட “ஒரு நாடு-ஒரு சட்டம்” செயலணி!

நீதி அமைச்சருக்கே தெரியாமல் அமைக்கப்பட்ட “ஒரு நாடு-ஒரு சட்டம்” செயலணி!

95
0

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த செயலணியை உருவாக்குவது தொடர்பில் தன்னுடன் எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்டதாக ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற செயலணி அமைக்கப்பட்டது.

அந்த செயலணி தொடர்பில் தற்போது பலரும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் அதிருப்பி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.