யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது.
மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாவட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.இலங்கையின் புதிய வாக்காளர்கள் 172,000 பேர் கடந்த ஆண்டு இணைக்கப்பட்ட நிலையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,400,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.