Home செய்திகள் பயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

213
0

எதிர்வரும் 21 ஆம் திகதி (நாளை) திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்துகளில் பயணிகளை அழைத்துச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை நீக்கப்படவுள்ளன.இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும்.
வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
பொது போக்குவரத்தில் பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாது.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியும்.
உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.
பொது இடங்களில் கூட்டமாக இருக்கக்கூடாது.

அத்துடன் அத்தோடு, தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது