யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இடைக்கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம். அதனடிப்படையில் யாழில் இதுவரை சுமார் 7,251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதி, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியதன் அடிப்படையில் அதிகளவான குடும்பங்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.