Home செய்திகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

144
0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று 3441 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 54ஆயிரத்து 784ஆக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.