
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேல் திசையில் 9.5 மைல்கள் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் நேற்று (20) தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ´எக்ஸ்பர்ஸ் பேர்ல்´ எனும் பொருட் கப்பல் இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 தொன் நைட்ரிக் அசிட், வேறு இரசாயன பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளடங்கிய 1,486 கொள்கலன்களுடன் 25 ஊழியர்கள் குறித்த கப்பலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.