Home உலக செய்திகள் அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிரிந்தது!

அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிரிந்தது!

68
0

பூமியில் – முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட அண்டார்ட்டிகா கண்டமானது உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். அப்படியான அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து தற்போது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை தனியாக பிரிந்து சென்றுள்ளது.

இந்த பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது என்றும் 175 கி.மீ. நீலமும், 25 கி.மீ. அகலமும் கொண்டது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோப்பர்நிகஸ் செண்டினல்-1 என்ற செயற்கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம், இந்த தகவல் உறுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பனிப்பாறைக்கு ஏ-76 (A-76) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியில் தற்போது உள்ள பனிப்பாறைகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பரப்பளவு 1,213 சதுர கி.மீ ஆகும். இதன்படி இந்த ஏ-76 பனிப்பாறையானது பரப்பளவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது ஆகும். 

இருப்பினும் இந்த பனிப்பாறை ஏற்கனவே வெடெல் கடலில் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த ஏ-76 பனிப்பாறை இன்னும் சில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்றுவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.