கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய நாளை மறு தினம் 10 ஆம் திகதி (திங்கள்கிழமை) காலை 4:00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 4:00 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருந்தகங்கள் உட்பட மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் ஆகியன நண்பகல் 12 மணி வரை இயங்கும் எனவும், குறித்த இருவார காலப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.