Home தமிழகச் செய்திகள் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:

360
0

முதல்வராக பதவியேற்ற பிறகு தலைமை செயலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

1. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.

2. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை.

3. கொரோனா நிவாரணமாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும்.

4. அனைத்து பெண்களுக்கும் நகரப் பேருந்துகளில் பயணிக்க இலவசம்.

5. புகார் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண புதிய துறை உருவாக்கம்.

இத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் ஊடாக ஏழை, மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளதோடு, தமிழக மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறார் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அவர்கள்.