
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அது பாஜக சார்பில் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் சிந்திய காட்சி, காண்போரை நெகிழ்ச் செய்தது. அதுபோல், கூட்டணி கட்சித் தலைவர்கள், மற்ற கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், குடும்பத்தினர் என்று அனைவரும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பதை காண ஆவலோடு இருந்ததை அவதானிக்க முடிந்தது.