தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையாகும். இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களால் வரவேற்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடந்து வருவதாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.