Home உலக செய்திகள் தமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி!

தமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 14 கோரிக்கைகளை கையளித்த விஜய் சேதுபதி!

322
0

சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக நாளைய தினம் (7) பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் ஒன்றாக வாழ்த்துக்களை தெரிவித்தும், 14 கோரிக்கைகளை முன்வைத்தும் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைதளம் மூலமும் தெரிவித்து வருகின்றனர்.