Home செய்திகள் யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம்!

யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம்!

141
0

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வெளி மாகாண மாணவர்கள் அதிசிறந்த சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 

அதற்கமைய யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார். 

இன்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர். 

இதற்கமைய, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.