Home செய்திகள் 3 இல் 2 பெரும்பான்மையுடன் ஆட்சியை தனதாக்கிய தி.மு.க – மே7 ல் முதலமைச்சராகும் மு.க.ஸ்ராலின்:

3 இல் 2 பெரும்பான்மையுடன் ஆட்சியை தனதாக்கிய தி.மு.க – மே7 ல் முதலமைச்சராகும் மு.க.ஸ்ராலின்:

146
0

நடைபெற்று முடிந்த தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி 234 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தாண்டி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்கு இந்தியா, இலங்கை உட்பட சர்வதேச நாடுகளின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பிலபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சராக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.