Home தாயக செய்திகள் இலங்கையில்-70 கர்ப்பிணி தாய் மார்களுக்கு கொரோனா தொற்று!

இலங்கையில்-70 கர்ப்பிணி தாய் மார்களுக்கு கொரோனா தொற்று!

24
0

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட 70 கர்ப்பிணி தாய் மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகச் சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித் துள்ளார்.

கொரோனா தொற்றால் 70 கர்ப்பிணி தாய்மார்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன், சிறுவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வகையில் வீடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ள வர்கள் வீடுகளில் இருப்பார்களாயின் அவர்களுக்கு அருகில் குழந் தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய சூழ்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.