Home செய்திகள் விதிமுறைகளை மீறிய இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.

விதிமுறைகளை மீறிய இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.

147
0

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நேற்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு தேவாலயங்களிலும் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டிய குற்றச்சாட்டில் குறித்த இரண்டு தேவாலயங்களும் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.