Home செய்திகள் தமிழ்நாட்டில் 50% இற்கும் அதிகமான இடங்களில் மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க முன்னிலை:

தமிழ்நாட்டில் 50% இற்கும் அதிகமான இடங்களில் மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க முன்னிலை:

15
0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாட்டில் 50% இற்கும் அதிகமான இடங்களில் மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க முன்னிலையில் உள்ளது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 234 தொகுதிகளில் 137 இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மீதமுள்ள 35 தொகுதிகளின் முடிவுகளுக்காக தமிழக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் முதன் முறையாக நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.