நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் – பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும்
கொரகாபிடிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவும்
காலி மாவட்டம் – அம்பலன்கொடை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கொடஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும்
தல்கஸ்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
அம்பாறை மாவட்டம் – தெஹியத்தகண்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம் – கலவான பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட ஹப்புகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.