Home செய்திகள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் உயிரிழப்பு!

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் உயிரிழப்பு!

10
0

அம்பாறையில் – மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருதில் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்களில் இருவரே இவ்வாறு நேற்று (30) மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42) மற்றும் எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) (மரணித்த இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.