Home உலக செய்திகள் வடக்கு இஸ்ரேலில், மததிருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் பலி!

வடக்கு இஸ்ரேலில், மததிருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் பலி!

157
0

வடக்கு இஸ்ரேலின், மவுண்ட் மெரோனில் நடைபெற்ற மததிருவிழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று (30) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற குறித்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட நிலையிலேயே கூட்ட நெரிசலில் சிக்சி 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் கரோனா தொற்று குறைவாக உள்ள போதும், மக்களை விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியிருந்த நிலையிலும் மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.