வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம் கண்டு கொள்ள முடியும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதாரப் பிரிவினர் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றத் தவறினால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான செலவுத் தொகையை குறித்த பயணிகளிடமே இலங்கை அரசாங்கம் பெற்று வருவதால் கால எல்லை மற்றும் செலவு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தப்பிரச்ச்அனையும் இல்லாத நிலையிலேயே தற்போது மேற்கண்ட தீர்மானத்திற்கு இலங்கை சுகாதார அமைச்சு வந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தல் காலத்தை மூன்று (3) வாரங்கள் வரை நீடிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஊர்ஜீதம் அற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.