Home உலக செய்திகள் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இருமுறை உருமாறிய கொரோனா:

17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இருமுறை உருமாறிய கொரோனா:

179
0

இந்திய வகையைச் சேர்ந்த இருமுறை உருமாறிய கொரோனா தீநுண்மி, 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த வாரம் மேலும் 57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியுள்ளது. இதற்கு பி.1.617 என்ற வகையைச் சோ்ந்த இந்திய வகை கொரோனா தீநுண்மி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 

ஏப்ரல் 27 ஆம் திகதி வரை, 17 நாடுகளில் இருந்து 1,200 முறை பி.1.617 வகை கொரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் இந்த வகை கொரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பரவும் மற்ற வகை கொரோனா தீநுண்மிகளைவிட பி.1.617 வகை தீநுண்மி வேகமாக வளர்ந்து பரவும் தன்மை கொண்டது. இதனால்தான் இந்தியாவில் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

மேலும், பொது சுகாதார விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல், திருவிழா, கலாசார நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றாகக் கூடுவதும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம். இவை தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.