2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ் ஊடக ஜாம்பவானுமான மாமனிதர் சிவராமின் 16வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று (29) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட தமிழ்ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சிவராம் தொடர்பான நினைவுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
