
இலங்கையில் ஒரே நாளில் அதிகப்படியான கொவிட் 19 நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாகவும், நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 1,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய இலங்கையில் ஒரு இலட்சத்து நான்காயிரத்து 938 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி 6 பேரின் மரணங்கள் பதிவான நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.