Home தமிழகச் செய்திகள் ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு:

ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு:

160
0

ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவதால் அவர்களை கண்காணிப்புக் குழுவில் சேர்க்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் முன்வைத்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழக்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்.27)  விசாரணைக்கு வந்தது.

அப்போது வேதாந்தா தரப்பில், ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் எத மாநிலங்களுக்கு கொடுக்க சொல்கிறீர்களோ அந்த மாநிலத்திற்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், அனுமதி அளித்த 10 நாள்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால் அதற்கு வேதாந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவதால், அவர்களை கண்காணிப்புக்குழுவில் சேர்க்கக்கூடாது என்றும் மத்திய அரசு வாதம் முன்வைத்துள்ளது.