Home தாயக செய்திகள் பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட யாழில் 7 பேருக்கு கொரோனா:

பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட யாழில் 7 பேருக்கு கொரோனா:

135
0

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தயாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.