Home செய்திகள் ஈ.பி.டி.பி க்குள் உட்கட்சி மோதல் – படுகாயமடைந்த உதவி செயலாளர்:

ஈ.பி.டி.பி க்குள் உட்கட்சி மோதல் – படுகாயமடைந்த உதவி செயலாளர்:

129
0

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று இரவு இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கட்சியின் உதவி மாவட்ட செயலாளருக்கும் இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் உதவி மாவட்ட செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.