Home தாயக செய்திகள் மேலும் 2 வாரங்கள் பல்கலைக் கழகங்களுக்கு பூட்டு:

மேலும் 2 வாரங்கள் பல்கலைக் கழகங்களுக்கு பூட்டு:

158
0

கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்களை மேலும் 2 வாரங்களுக்கு மூடி வைப்பதற்கும், கொரோனா நோய் பரவல் நிலைமைகளை அவதானித்து அதன் பின்னர் மீள திறக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டிருந்து.