இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.
மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்று புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
