
இலங்கையில் (ஏப்ரல்.21) மேலும் 516 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியும், கொரோனா நோய்த் தடுப்பு பொறுப்பதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 98,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான 3752 நோயாளர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்திலும், இரண்டாவதாக கம்பஹாவில் அதிக கொரோனா நோய்த் தொற்றாளர் பதிவாகியுள்ளனர்.
குருணாகலையில் நேற்று 43 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.