இந்தியாவில் – கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 295,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,09,004 பேராக அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 21,56,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடு முழுவதும் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 182,570 பேராக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 26,94,14,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது நாட்டில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் மே 1ஆம் திகதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளமை க்க்க்க்குறிப்பிடத்தக்கது.