Home செய்திகள் தியாகி அன்னை பூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு:

தியாகி அன்னை பூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு:

142
0

அமைதிப் படை எனும் போர்வையில் தமிழர் தாயகம் வந்திறங்கி இனப்படுகொலைகளை அரங்கேற்றிய இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாகி அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது தியாகி அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.