வடமராட்சி – கிழக்கு, முள்ளி பகுதியில் சிறீலங்கா அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தை செலுத்தியவரும், அதில் பயனித்தவருமே குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களாவர்.
இவர்கள் இருவரும் துன்னாலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டிப்பர் வாகனத்தை வீதித் தடைகளை போட்டு நிறுத்த முயற்சித்த காவல்துறை மற்றும் சிறீலங்கா அதிரடி படையினர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற நிலையிலேயே குறித்த டிப்பர் வாகனம் மீது சிறீலங்கா அதிரடி படையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.