இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளதோடு, ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 15,69,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில், இந்தியாவில் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.