புலிகள் அமைப்பினால் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கில் இருந்து பாதாள குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ சமரத்ன உள்ளிட்ட 11 பேரை விடுவித்து கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரில் 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான் அவர்களை விடுவித்து தீர்ப்பை அறிவித்தார்.
வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கனேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.