???????????????????????????????????? ????????????????????????????????????
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25) வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை காவற்துறையினர் மற்றும் வாழைச்சேனை அதிரடிப்படையினருடன் இணைந்து இரண்டு நாட்கள் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது உழவு இயந்திரம் பதினாறு (16), டிப்பர் வாகனம் ஏழு (07) லொறி இரண்டு (02) ஆகிய இருபத்தைந்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டதுடன். இருபத்தைந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.