இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 10) மட்டும் நாடளாவிய ரீதியில் 152,879 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் இந்திய மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதே வேளை நேற்று மட்டும் 839 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் சாவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.