சீருடைகளை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் கீழ் யாழ்ப்பாண மேயர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை கொண்ட நிர்வாகத்தை நடாத்திவரும் கொழும்பு மேயர் விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார் என நாங்கள் குற்றம் சாட்டப் போகின்றோமா?” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “தனது நகர சபை பாதுகாப்பு படை அணிந்திருந்த சீருடைகளை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் கீழ் யாழ்ப்பாண மேயர் கைது செய்யப்பட்டார். கொழும்பு நகரசபையின் பாதுகாப்பு காவல் படையினரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை அணிகின்றார்கள். இந்த நிலையில் கொழும்பு மேயர் விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார் என நாங்கள் குற்றம் சாட்டப் போகின்றோமா?” என மங்கள சமரவீர கேள்வி எழுப்பி அப் பதிவையிட்டுள்ளார்.