தமிழ் மக்களை தொடர்ந்தும் பயப்பீதியிலேயே வைத்திருப்பதனையே அரசு விரும்புவதன் வெளிப்பாடகவே யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் கைதுச் சம்பவம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் விசாரணையின் நிமித்தம் அழைக்கப்பட்டு அதிகாலைவேளையில் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த கைதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனெனில் யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று மாநகர சபைகளிற்குரிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதனால் மாநகர முதல்வரின் கைது நடவடிக்கையினை கண்டிப்பதோடு உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். என்றார்.