பாதுகாப்பு அமைச்சின் அனுமதி உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் “காவல் படை” கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும், அவர்களின் சீருடைகளை ஒப்படைக்குமாறும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றையதினம் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.