
யாழ்ப்பாணத்தில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் மூன்று பேருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 460 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.