யாழ்ப்பாணம் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெற்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட (PCR) மாதிரிகள் அனுப்பப்பட்டு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் இன்று கிடைத்துள்ளது.
அதன் பிரகாரம் குறித்த 54 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.