மாத்தறை – பந்தந்தர பகுதியில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரை பொலீஸ் ஜீப் மோதியதில் குறித்த வயோதிபர் மரணமடைந்துள்ளார்.
திஹகொட பகுதியை சேர்ந்த 75 வயது முதியவரே குறித்த விபத்தில் பலியானவராவார். விபத்தில் சிக்கிய முதியவரை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை நீதவான் நீதிமன்றுக்கு சந்தேக நபர் ஒருவரை அழைத்து சென்ற பொலீஸ் ஜீப் ஏ குறித்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஜீப் ஐ செலுத்திய பிலிஸ் உத்தியோகஸ்தர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாக பிலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.