Home செய்திகள் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்!

156
0

சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவர் விகே சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் இல்ல முகவரியில் சசிகலாவுக்கு வாக்குரிமை இருந்துவந்தது. ஆனால், போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் வசித்துவரும் சசிகலா அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்பதால், சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இஅடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.