பரபரப்பாக இடம்பெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று முந்தினம் இரவு 11:59 உடன் நிறைவு பெற்றிருந்த நிலையில் இன்று தமிழ் நாட்டின் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் அமைதியாக இடம்பெற்று வருகிறது.
இன்று காலை முதல் மக்கள் திரள் திரளாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வரிசையில் நின்று வாக்குகளை செலுத்துவதை காணமுடிகிறது.
வழக்கத்திற்கு மாறாக இம்முறை அதிக வாக்காளர்கள் கொண்ட தேர்தலாக இத் தேர்தல் அமைவதாக தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, நா.த..க, ம.நீ.மை, மற்றும் அ.ம.மு.க ஆகிய வற்றில் எது வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.