வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைய நாட்டிற்குள் வரும் பயணிகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சகம் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த அறிவிப்பை தற்போது மீளப் பெற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், இனிமேல் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அரசாங்கத்திடம் அனுமதிப் பெறத் தேவையில்லை என அறிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப தனது சுற்றுலா இலக்குகளை அடைவதில் இலங்கை கவனம் செலுத்தி, வழக்கப்போல மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.