Home உலக செய்திகள் தமிழக தேர்தல் முறைகேடுகள் கசிவு – வாக்காளர் செல்லும் முன்னரே செலுத்தப்பட்ட வாக்குகள்!

தமிழக தேர்தல் முறைகேடுகள் கசிவு – வாக்காளர் செல்லும் முன்னரே செலுத்தப்பட்ட வாக்குகள்!

155
0

தமிழ் நாட்டின் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் இன்று இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் முறைகேடுகள் சில வெளிவந்துள்ளன.

கடலூர் சட்டமன்ற தொகுதி காராமணிக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட 46 வது  வாக்குச்சாவடியில் கலா என்பவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி உள்ளது என வாக்குச்சாவடி அதிகாரிகளால் கூறப்பட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்த கலா அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதே போல், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட புதுராமகிருஷ்ணபுரம் 276A வாக்குசாவடி மில் சாந்தி என்பவர் வாக்கு அவர் வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இது போன்று இன்னும் பல நூற்றுக்கணக்கான வாக்கு மோசடிகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.